தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேவுக்கு புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 13 JAN 2021 5:36PM by PIB Chennai

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேவுக்கு 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் புகழஞ்சலி செலுத்தப்படும். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் பொன்விழா நிகழ்ச்சியின் போது, சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் கரே இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்தப் புகழஞ்சலியை முன்னிட்டு இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில்  கீழ்க்கண்ட திரைப்படங்கள் திரையிடப்படும்:

1. சாருலதா (1964)

2. கரே பைரே (1984)

3. பதேர் பாஞ்சாலி (1955)

4. ஷத்ரான்ஜ் கே கிலாரி (1977)

5. சோனார் கெல்லா (1974)

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688261

------

Release ID: 1688261)


(रिलीज़ आईडी: 1688304) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu