வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிறுதானியப் பொருட்களுக்கு ஊக்கமளிப்பு: அபேடாவின் வாங்குவோர் விற்போர் காணொலிக் கூட்டம்

प्रविष्टि तिथि: 13 JAN 2021 2:34PM by PIB Chennai

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபேடா, வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் ஆதரவு வழங்கப்படும் ஆந்திரப்பிரதேச வறட்சி தடுப்பு திட்டம் (ஏபிடிஎம்பி) ஆகியவை இணைந்து சந்தைப்படுத்துதலின் இணைப்பை உருவாக்குவதற்காக சிறுதானிய ஏற்றுமதியாளர்கள், சிறு தானியங்களுக்கான விவசாய உற்பத்தி நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக வாங்குவோர் விற்போர் கூட்டத்தை நடத்தின.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இலக்கை எட்டும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2021-2026-இல், சிறுதானியம், சிறுதானியப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபேடா தயார் செய்து வருகிறது.

இதையடுத்து சிறுதானிய தொகுப்புகளைக் கண்டறிவது, வாங்குவோர் விற்போர் இடையேயான கலந்துரையாடலை மேம்படுத்துவதற்காக அபேடா உருவாக்கியுள்ள விவசாயிகளுடன் இணையும் தளத்தில் விவசாய உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் பதிவு செய்வது, இந்திய சிறுதானியங்களை சர்வதேச சந்தையில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவது போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

 

இந்த நிகழ்ச்சியில் அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, ஆந்திரப் பிரதேச அரசின் வேளாண் ஆணையர் திரு ஹெச் அருண்குமார், ஆந்திரப்பிரதேச வறட்சி தடுப்புத் திட்ட தலைமை செயல் அதிகாரி திரு ஜி வினய்சந்த், இந்த அமைப்புகளின் உயரதிகாரிகள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், சிறு தானிய ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688228

******

(Release ID: 1688228)


(रिलीज़ आईडी: 1688295) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi