நிதி அமைச்சகம்

எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய 8வது மாநிலம் கேரளா: ரூ.2,373 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி

प्रविष्टि तिथि: 13 JAN 2021 1:22PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை உருவாக்கிய, ‘எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தத்தைமேற்கொள்ளும் 8வது மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது. ஆகையால், இந்த மாநிலம் வெளிச்சந்தையில்  ரூ.2,373 கோடி நிதி ஆதாரம் திரட்டத் தகுதி பெற்றுள்ளதுஇதற்கான அனுமதியை, செலவினத்துறை ஜனவரி 12ம் தேதி வழங்கியதுஇந்தச் சீர்திருத்தத்தை நிறைவேற்றிய தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பட்டியலில் கேரளா தற்போது இணைந்துள்ளதுஎளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை நிறைவேற்றியதால்இந்த 8 மாநிலங்களும், ரூ.23,149 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.4,813 கோடியும் அடங்கும்.

எளிதில் தொழில் செய்யும் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு, கூடுதல் கடன் பெறும் அனுமதியை வழங்க, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முடிவு செய்தது.

            இதுவரை, 10 மாநிலங்கள், ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 8 மாநிலங்கள் எளிதில் தொழில் செய்யும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. 4 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளனசீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களுக்கு கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.56,526 கோடியாகும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688204

******

 

(Release ID: 1688204)


(रिलीज़ आईडी: 1688292) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu , Malayalam