சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்டமன்றத் துறை 1.1.2020 முதல் 1.11.2020 வரை 41 சட்டமன்ற முன்மொழிவுகளை ஆய்வு செய்து, 40 மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது
Posted On:
12 JAN 2021 3:54PM by PIB Chennai
சட்டமன்றத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்:
* 2020 ஜனவரி 1 முதல் நவம்பர் மாதம் வரை 41 சட்டமன்ற முன்மொழிவுகளை இத்துறை ஆய்வு செய்தது. இந்தக் காலகட்டத்தில் 40 மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்காக அவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
* ஏற்கனவே நிலுவையில் இருந்த மசோதாக்கள் மற்றும் 01/01/2020 முதல் 01/11/2020 வரை மேற்கொள்ளப்பட்ட மசோதாக்கள் ஆக மொத்தம் 40 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2020-ம் அடங்கும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 123 இன் கீழ் 14 அவசரச் சட்டங்கள் குடியரசு தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டன.
தேர்தல் சட்டங்களும் சீர்திருத்தங்களும்:
• தொகுதி மறுசீரமைத்தல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் வடகிழக்கு இந்தியாவின் ஒரு சில மாநிலங்களிலும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன.
• தேர்தல் சீர்திருத்தங்கள் - மின்னணு வாயிலாக தபால் வாக்குகள் செலுத்தும் முறை
ஒரு சில பிரிவு வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி
பட்டியலின, பட்டியல் பழங்குடி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
மாத பத்திரிக்கைகள் வெளியீடு:
உச்சத்தம் நியாயாலயா நிர்ணய பத்திரிக்கை, உச்சச் நியாலல்யா சிவில் நிர்ணய பத்திரிக்கை, உச் நியாலய தண்டிக் நிர்ணய பத்திரிக்கை ஆகிய மூன்று பத்திரிக்கைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படும் தீர்ப்புகளை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமன்றத் துறையின் விதி சாகித்ய பிரகாஷனால் வெளியிடப்படுகின்றன.
இந்திய சட்டத் தொகுப்பு தகவல் முறை (ஐசிஐஎஸ்):
மத்திய மற்றும் மாநில சட்டங்களை டிஜிட்டல் வாயிலாக ஒரே இடத்தில் சேமிக்கும் வகையிலான இந்திய சட்டத் தொகுப்பு தகவல் முறையை சட்டம் மற்றும் நீதித் துறையின் வழிகாட்டுதலின் படி தேசிய தகவலியல் ஆணையம் வடிவமைத்துள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் சட்ட ரீதியாக அதிகாரம் வழங்குவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687920
*******************
(Release ID: 1688000)
Visitor Counter : 201