புவி அறிவியல் அமைச்சகம்

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

प्रविष्टि तिथि: 12 JAN 2021 1:32PM by PIB Chennai

இந்திய வானிலை மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குமரி முனை மற்றும் அதன் அருகேயுள்ள  பகுதிகளில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதன்பின் இப்பகுதியில் மழைப்பொழிவு குறையும்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2021 ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகளிலும், கேரளா மற்றும் மாஹேவில் 12ம் தேதியும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687885

••••••

(Release ID: 1687885)


(रिलीज़ आईडी: 1687946) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Kannada , Malayalam