ரெயில்வே அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                11 JAN 2021 7:04PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகளை ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று ஆய்வு செய்தார் 
பெங்களூரு நகரின் வளர்ந்து வரும்  தேவைகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் புறநகர் ரயில் திட்டம் திட்டமிட வேண்டும் என அமைச்ச்ர திரு பியூஷ் கோயல் கூறினார்.  
இத்திட்டம் இந்திய கொள்கை, தற்சார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் கூறினார். 
இந்த கூட்டத்தில் ரயில்வே வாரிய மூத்த அதிகாரிகள், கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 
-----
(Release ID: 1687689)
 
                
                
                
                
                
                (Release ID: 1687737)
                Visitor Counter : 162