பாதுகாப்பு அமைச்சகம்
போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த பொருட்கள் ஒப்படைப்பு
Posted On:
10 JAN 2021 5:15PM by PIB Chennai
தபாஸ் மற்றம் விரைவு ஆளில்லா விமானங்களின் சக்கர அமைப்புகள் மற்றும் பி-75 ரக நீர்மூழ்கி கப்பல்களுக்கான 18 வகையான பில்டர்களை ஒப்படைக்கும் விழா, சென்னையில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வகத்தில் ஜனவரி 10ம் தேதி நடந்தது. பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய(டிஆர்டிஓ) தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, கவச இன்ஜினியரிங் அமைப்பின்(ஏசிஇ) திரு.பி.கே.மேத்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு வடிவமைப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை டிஆர்டிஓ தலைவர் எடுத்துக் கூறினார் மற்றும் இதுபோன்ற முக்கிய பாகங்களின், தாயாரிப்பு மையங்களை ஏற்படுத்திய தொழில்துறையினரை பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687456
*****
(Release ID: 1687497)