தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஆண்டு இறுதி கண்ணோட்டம்-2020: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

Posted On: 08 JAN 2021 5:32PM by PIB Chennai

தொழிலாளர் சார்ந்த நடவடிக்கைகள்

* பணியாற்றும் நிறுவனங்களை சார்ந்திருக்காமல், கோரிக்கை படிவத்தை தாமாகவே பார்த்தல், பதிவிறக்கம் செய்தல் மற்றும் வெளியேறிய தேதியை பதிவு செய்தல் ஆகியவற்றை பணியாளர்களே ஒருங்கிணைந்த இணையதளத்தில் செய்யலாம்.

* 2020 அக்டோபர் 31 வரை 47.58 லட்சம் கொவிட்-19 முன்பண கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ள நாடு முழுவதுமுள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்கள், ரூ 12,220.26 கோடியை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளன. 2020 அக்டோபர் 1 முதல் 2020 அக்டோபர் 31 வரை, 149.31 லட்சம் இறுதி பைசல் மற்றும் முன்பண கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்கள், ரூ 55,900.88 கோடியை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளன.

* வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்களின் முன்பண கோரிக்கைகளுக்கு தானியங்கி முறை மூலம் தீர்வு.

* உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக பல்வேறு இடங்களில் சேவை

* கொவிட்-19 பெருந்தொற்றின் போது உமாங்கின் மூலம் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தடையில்லா சேவை வழங்கல்

* சந்தாதாரர்களின் கே ஒய் சி தகவல்கள் பதிவேற்றம்

* பிறந்தநாள் திருத்தம் முறையில் மாற்றம்

* டிஜிலாக்கரில் ஓய்வூதிய உத்தரவுகள் மற்றும் யு ஏ என் அட்டைகள்

* உமாங்க் செயலியில் ஈபிஎஸ், 1995-இன் கீழ் திட்ட சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி வழங்குவோர் சார்ந்த நடவடிக்கைகள்

* ஜம்மு-காஷ்மீர் வருங்கால வைப்புநிதி தரவுகளை பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தரவுகளோடு இணைத்தல்

* பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி நிவாரண தொகுப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

* 2020 மார்ச் மாதத்தின் பங்கை செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

* பங்கு தொகை குறைப்பு

* மின்னணு சலான் மற்றும் ரசீது பதிவு எளிமையாக்கப்பட்டுள்ளது

* அங்கீகாரம் பெற்ற கையெழுத்தாளர்களின் கையெழுத்து மின்னணு மூலம் பதிவு

* வெளிப்படையான மற்றும் விரிவான பதிவு செயல்முறையை உறுதி செய்தல்

* நீதிசார் வழக்குகளின் காணொலி விசாரணை

* விலக்களிக்கப்பட்ட அறக்கட்டளகள் அதிகளவில் பணத்தை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பரிவர்த்தனை செய்யலாம்

**********************


(Release ID: 1687198) Visitor Counter : 266