இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டுத் துறை: 2020ன் முக்கிய மைல்கற்கள்

Posted On: 08 JAN 2021 10:35AM by PIB Chennai

2020ம் ஆண்டில் விளையாட்டுத்துறை மேற்கொண்ட முக்கிய பணிகள்:

* உடல் தகுதி இந்தியாவின் முதலாம் ஆண்டு: உடல் தகுதி இந்தியாவின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 05-18 வயதினர், 18- 65 வயதினர், 65க்கும் மேற்பட்ட வயதினர் என பல பிரிவினருக்கு   ‘கோல்ஸ்’ என்ற பெயரில் வயதுக்கு ஏற்ற உடல்தகுதி நெறிமுறைகளை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் 2020ம் ஆண்டு செப்டம்பர்  24ம் தேதி தொடங்கி வைத்தார்.

* உடல் தகுதி இந்தியா, 2வது சைக்கிளத்தான்  போட்டியில் 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

* தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், திரு கிரண் ரிஜிஜூ, பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வாலுடன் இணைந்து, 200 கி.மீ தூர ‘உடல் தகுதி இந்தியா நடைப் போட்டியை’ 2020 அக்டோபர் 31ம் தேதி தொடங்கி வைத்தார். 

* உடல் தகுதி பள்ளி வாரத்தின் 2வது நிகழ்ச்சி 2020 டிசம்பர் 31ம் தேதி வரை தொடர்ந்தது. இதை 2.5 லட்சம் பள்ளிகள் கொண்டாடின.

* உடல் தகுதி இந்தியா உரைத் தொடர் நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில்நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலர் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளை ஊக்குவித்தனர்.

* நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2020 ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து, மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினமான  அக்டோபர் 2ம் தேதி வரையிலான ‘உடல் தகுதி சுதந்திர ஓட்டத்தை’ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.  இதில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 18 கோடி கி.மீ தூரம் இந்நிகழ்ச்சி நடந்தது. 

* 47,133 இளைஞர் அமைப்புகள், உடல் தகுதி இளைஞர் அமைப்பாக பதிவு செய்து கொண்டன.

* உடல் தகுதி யோகா தினம், ஆன்லைன் நிகழ்ச்சியாக 2020 ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.

* 2021 கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுக்களில் கட்கா, களரிப்பயற்று, தாங்-டா, மல்லக்கம்பா ஆகியவை சேர்க்கப்பட்டன.

* மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் 6 உலகத் தரம் வாய்ந்த ஸ்குவாஸ் தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

* போட்டி விளையாட்டாக, யோகாசனத்துக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டத்தில்(டாப்ஸ்), 4 பிரிவு விளையாட்டுக்களில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

*  பிரிக்ஸ் நாடுகள் இடையே உடல்சார் பண்பாடு மற்றும் விளையாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

* 500 தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு நிதியளிக்க புதிய ஊக்குவிப்புத் திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

* அரசு வேலை வாய்ப்பில், விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டுப் பிரிவில்  விண்ணப்பிக்க 20 புதிய பிரிவினர் தகுதி பெற்றுள்ளனர். 

* தேசிய விளையாட்டு விருதுகளுக்கான ரொக்கப்பரிசை அரசு உயர்த்தியுள்ளது.

* ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவ, 1000 கேலோ இந்தியா மையங்களை அரசு தொடங்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687012

******

(Release ID: 1687012)


(Release ID: 1687084) Visitor Counter : 638