ரெயில்வே அமைச்சகம்
மேற்கு சரக்கு வழித்தடத்தில் ரேவாரி-மதார் பிரிவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
07 JAN 2021 4:10PM by PIB Chennai
மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரேவாரி-மதார் பிரிவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கப் போகிறது.
இந்திய பிரத்யேக சரக்கு வழித்தட நிறுவனத்தால் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் (1506 வழி கி.மீ) மற்றும் கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் (சோன்நகர்-தன்குனி அரசு தனியார் கூட்டு முறை பிரிவு உட்பட 1875 வழி கி.மீ) கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
லூதியானவிற்கு (பஞ்சாப்) அருகிலுள்ள சாஹ்னேவாலில் தொடங்கும் கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் வழியாக மேற்கு வங்கத்தில் உள்ள தன்குனி வரை செல்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரியை மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்துடன் இணைக்கும் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686785
***
(Release ID: 1686785)
(Release ID: 1686811)
Visitor Counter : 292