பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மத்திய பிரதேசத்தில் ஐந்து உணவுப் பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: ட்ரைஃபெட்- அகில் பாரதிய வன்வாசி கல்யாண் கேந்திரா கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 04 JAN 2021 5:48PM by PIB Chennai

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பு (ட்ரைஃபெட்), மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இயங்கும் அகில் பாரதிய வன்வாசி கல்யாண் கேந்திரா என்ற அமைப்புடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி மத்தியப் பிரதேசத்தில் ஐந்து மாவட்டங்களில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு நிறுவனங்களும் 2021 ஜனவரி 3-ஆம் தேதி கையெழுத்திட்டன. மத்தியப் பிரதேசத்தின் பேதுல் பாராளுமன்ற உறுப்பினர் திரு துர்கா தாஸ் யுகே முன்னிலையில், ட்ரைஃபெட் அமைப்பின் மேலாண் இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, அகில் பாரதிய வன்வாசி கல்யாண் கேந்திராவின் பொதுச் செயலாளர் திரு யோகேஷ் பாபத் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, வன் தன் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686008

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1686092) வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi