நிதி அமைச்சகம்

ரூ.831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு : தில்லியில் ஒருவர் கைது

प्रविष्टि तिथि: 03 JAN 2021 1:12PM by PIB Chennai

பதிவு செய்யாமல், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் தில்லியில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி, ரூ.831.72 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

தில்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா/பான் மசாலா  நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி மேற்கு ஆணையரக அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்அங்கு புகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத அந்த நிறுவனத்தில் 65 பேர் பணியாற்றிவந்தனர். இங்கு ரூ.4.14 கோடி அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனசுமார் ரூ.831.72 கோடி அளவுக்கு இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தது மதிப்பிடப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685776

-----


(रिलीज़ आईडी: 1685803) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Bengali , Punjabi , Telugu