ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம்: ஆண்டு இறுதிக் கண்ணோட்டம்-2020

Posted On: 01 JAN 2021 6:45PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக வரலாறு காணாத நடவடிக்கைகளை 2020-ஆம் ஆண்டு மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் எடுத்தது. முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ரூ.1512 கோடி மதிப்பிலான 15 அந்நிய நேரடி முதலீட்டு முன்மொழிதல்களுக்கு மருந்துகள் துறை 2020-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

* ரூ.7,211 கோடி மதிப்பிலான 11 அந்நிய நேரடி முதலீட்டு முன்மொழிதல்கள் மருந்துகள் துறையின் பரிசீலனையில் உள்ளன.

* ரூ.15801.96 கோடியை ஊட்டச்சத்து சார்ந்த மானியமாகவும், ரூ. 53950.75 கோடியை உரங்களுக்கான மானியமாகவும் 2020-ஆம் வருடம் அரசு வழங்கியது.

* 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 15 வரையிலான மொத்த உர விற்பனை 451.16 இலட்சம் மெட்ரிக் டன்களைத் தொட்டது.

* ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் நான்கு பெட்ரோ இரசாயன முதலீட்டு மண்டலக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ 7.63 இலட்சம் கோடி முதலீட்டை இவை ஈர்க்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685432


(Release ID: 1685495) Visitor Counter : 297