அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை வரைவினை, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது
Posted On:
01 JAN 2021 6:41PM by PIB Chennai
ஐந்தாவது தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கையின் வரைவு இறுதி செய்யப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துகளை வரவேற்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
பரவலாக்குதல், ஆதாரம் சார்ந்த தகவல்கள், கீழிருந்து மேலாக அணுகல், நிபுணர்களால் வழிநடத்தப்படுதல் மற்றும் அனைவரையும் உள்ளிணைத்தல் ஆகிய முக்கியமான கொள்கைகளின் அடிப்படையில் ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை அமைந்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணையதளத்தில் ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை பதிவேற்றப்பட்டுள்ளது.
https://dst.gov.in/draft-5th-national-science-technology-and-innovation-policy-public-consultation என்னும் இணைப்பில் இதைக் காணலாம்.
ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை குறித்த தங்கள் ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் உள்ளீடுகளை 2021 ஜனவரி 25-க்குள் india.stip[at]gmail[dot]com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685427
----
(Release ID: 1685492)
Visitor Counter : 304