பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் பொருள்களின் புவிசார் குறியீட்டுக்காக பல்வேறு அமைச்சகங்கள், துறைகளோடு டிரைஃபெட் கூட்டு

Posted On: 01 JAN 2021 5:03PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று முன் எப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளதால், “உள்ளூர்ப் பொருள்களுக்கு ஊக்கம்மற்றும்தற்சார்பு இந்தியாஆகியவற்றை நோக்கி கவனம் திரும்பியுள்ளது.

கைவினைப் பொருள்கள், கைத்தறிப் பொருள்கள் மற்றும் இதர தயாரிப்புகளில் இந்தியாவுக்கு சிறப்பான பாரம்பரியம் உள்ளது. பழங்குடியினர் பொருள்களின் புவிசார் குறியீட்டுக்காக பல்வேறு அமைச்சகங்கள், துறைகளோடு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்பு (டிரைஃபெட்) பணியாற்றவிருக்கிறது.

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்பு, பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடெமி நிறுவனம், கலாச்சார அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தக அமைச்சகம், இந்தியத் தபால்துறை, சுற்றுலா அமைச்சகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவற்றுடன் புவிசார் குறியீடுகளுக்காக இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்பு இணைந்து பணிபுரியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685387

                                                             ----


(Release ID: 1685441) Visitor Counter : 252


Read this release in: English , Urdu , Hindi , Punjabi