நிலக்கரி அமைச்சகம்

2020-இல் நிலக்கரித்துறை - ஒரு பார்வை

Posted On: 31 DEC 2020 2:56PM by PIB Chennai

நிலக்கரித்துறைச் சீர்திருத்தங்கள் - பின்னணி: 

 * இந்தியா தற்போது சுமார் 729 மில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தி நடக்கிறது.

* ஆனாலும், உள்நாட்டு உற்பத்தியால், நாட்டின் நிலக்கரித் தேவையை ஈடு செய்ய முடியவில்லை.  இதனால் இந்தியா கடந்த ஆண்டு 247 மில்லியன் டன்கள் நிலக்கரியை இறக்குமதி செய்தது. இதற்காக 1.58 இலட்சம் கோடி செலவிடப்பட்டது.

* நிலக்கரி உற்பத்தியில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாகவும், நிலக்கரி வளத்தில் ஐந்தாவது பெரிய நாடாக இருந்தாலும், உள்நாட்டுத் தேவைக்கான நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியவில்லை. 

* விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்தது. நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதில் வெளிப்படையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

* நிலக்கரித்துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க நிதிஆயோக் துணைத்தலைவர் தலைமையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக இந்தக் குழு பல பரிந்துரைகளை வழங்கியது.

* இது பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும் அந்நியச் செலாவணியை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை குறைத்தது.

* நிலக்கரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் தாக்கம் எஃகு, அலுமினியம், உரம் மற்றும் சிமெண்ட் துறையிலும் உணரப்பட்டது.

* சட்டங்கள் மற்றும் கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்களால், 38 நிலக்கரிச் சுரங்கங்களை வரத்தக ரீதியாக ஏலம் விடும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதில் 19 நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் கடந்த நவம்பர் மாதம் வெற்றிகரமாக முடிந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,656 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* 2018-19ஆம் ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 235 மெட்ரிக் டன்டாக இருந்தது. இது 2019-20இல் 247 மெட்ரிக் டன்னாக இருந்தது.

* இறக்குமதியைக் குறைக்க, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இது தற்சார்பு இந்தியா இலக்குக்கு வழி வகுக்கும்.

* 2023-24ஆம் ஆண்டில், நிலக்கரித் தேவை 1.27 பில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவையை நிறைவேற்ற, நிலக்கரி உற்பத்தியை 2023-24ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685058

**********************


(Release ID: 1685178) Visitor Counter : 179