வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் ஆண்டு நிறைவு அறிக்கை
Posted On:
31 DEC 2020 12:36PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையில் 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சில முன்முயற்சிகள், நடவடிக்கைகளுள் ஒரு சில:
எளிதான வர்த்தகம் மேற்கொள்ளுதல்:
• எளிதான வர்த்தகத்தை நாடெங்கிலும் மேற்கொள்ளும் வகையில் தற்போதுள்ள நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டதோடு சிறப்பான மற்றும் தரமான ஆளுகையை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட உலக வங்கியின் வர்த்தகத்தை மேற்கொள்ளும் அறிக்கை (டிபிஆர்) 2020-இன் படி 190 நாடுகளுள் இந்தியா 63-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
• மாநிலங்களில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நோக்கத்தோடு உலக வங்கியுடன் இணைந்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குறிப்பிட்ட துறைகளில் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன. அந்த வகையில் மாநில சீர்திருத்தங்களுக்கான செயல் திட்ட அறிக்கை 2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி வணிக உரிமை, சுகாதாரம், திரையரங்குகள், தொலைத்தொடர்பு, சுற்றுலா உள்ளிட்ட 24 துறைகளில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
• மாநிலங்களைத் தொடர்ந்து மாவட்ட சீர்திருத்தங்களுக்கான செயல் திட்ட அறிக்கை 2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எட்டு துறைகளில் சான்றிதழ்கள், பதிவுகள், அனுமதி போன்றவற்றின் நடைமுறையே எளிதாக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
முதலீடுகளை ஊக்குவித்தல்:
• உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.97 இலட்சம் கோடி மதிப்பில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருந்து, தொலைத்தொடர்பு, உணவு பொருள்கள் உள்ளிட்ட 13 துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
• பெருந்தொற்றுக்கு இடையே இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு சூழலை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளில் “செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு (EGoS) மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் (PDCs)” உருவாக்கப்பட்டன.
• நாட்டில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படுவதற்காக மத்திய முதலீட்டு அனுமதி பிரிவு தொடங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாநிலங்களில் 2021 ஏப்ரல் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
• மாநிலங்கள் முழுவதும் உள்ள தொழில் பகுதிகள்/தொகுப்புகள் குறித்த ஜிஐஎஸ் உதவியுடன் கூடிய தரவுகளைக் கொண்ட தொழிலியல் தகவல் முறை உருவாக்கப்பட்டது. 4.76 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 3390 தொழில் பூங்காக்கள்/சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவை இந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
• தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு தன்மையை அறிந்து அதில் கவனம் செலுத்தும் ‘ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்' அணுகுமுறை உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு சில மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதனை தேசியமயமாக்குவதன் மூலம் 739 மாவட்டங்களில் மொத்தம் 739 பொருள்களில் கவனம் செலுத்த முடியும்.
ஸ்டார்ட் அப் இந்தியா:
• ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 586 மாவட்டங்களில் புதுமையான நிறுவனங்களுக்கான கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு 4.2 இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. 40,000-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் அதிக வேலைவாய்ப்பு மற்றும் தன்னிறைவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி மூன்றாவது மிகப்பெரும் நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு:
• அந்நிய நேரடி முதலீடு, உலகமயமாக்கலில் மிகப்பெரும் பங்கு வகிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அரசு தொடர்ந்து வகுத்து வருகின்றது.
• சிவில் விமானம், பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் ஏராளமான சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685013
**********************
(Release ID: 1685145)
Visitor Counter : 415