வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் 2020 - வர்த்தகத்துறை, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

Posted On: 30 DEC 2020 5:08PM by PIB Chennai

வர்த்தகத்துறை 2020ஆம் ஆண்டு மேற்கொண்ட பணிகளின் முக்கியமான அம்சங்கள்:

* கோவிட்-19 சமயத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை: அந்நிய வர்த்தகக் கொள்கை 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. அங்கீகார காலக்கெடு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

* அவசரகாலக் கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பிணையின்றி ரூ.3லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டது.

* கோவிட்-19 சமயத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை:  உலகம் முழுவதும் 114 நாடுகளுக்கு 45 டன் மற்றும் 400 மில்லியன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை இந்தியா வழங்கியது. 96 மில்லியன் பாரசிடமால் மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகள் 24 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. 57 நாடுகளுக்கு இதர அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

* முழு உடல் கவச உடைகள் தயாரிப்பு ஒரு நாளைக்கு ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

* அத்தியாவசியம் அற்ற பொருள்களின் இறக்குமதிகள் குறைப்பு: உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்க அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதிகள் குறைக்கப்பட்டன.  தங்கம், வெள்ளி, பயோ எரிபொருள், அகர்பத்தி, டயர்கள், கலர் டி.வி மற்றும் இதர உபகரணங்களின் இறக்குமதி குறைக்கப்பட்டது. பூக்கள், இயற்கை ரப்பர், பொம்மைகள், எல்இடி பொருள்களின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஏசி, பிரிட்ஜ், பேப்பர் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அரசு இ-சந்தை இணையதளம் மூலம் 2020 டிசம்பர் 30ஆம் தேதி வரை ரூ.74,552 கோடிக்குப் பரிவர்த்தனை நடந்துள்ளது. 17.6 இலட்சம் தயாரிப்புகள், 9 இலட்சம் விற்பனையாளர்கள், சேவை அளிப்பவர்கள், 11,543 தயாரிப்புப் பிரிவுகள் அரசு இ-சந்தையில் உள்ளன. 

* இருதரப்பு வர்த்தக வளர்ச்சி: கடந்த ஜூலை 15ஆம் தேதி அன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த, 15வது இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

* இந்தியா - இந்தோனேஷிய இடையே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடந்த இரு தரப்பு வரத்தக அமைச்சர்கள் கூட்டத்தில் இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்தியா - மொரிசியஸ் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளது.

கோவிட்-19 சூழல் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது. மூன்று அமெரிக்க நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பூசிகளை அதிகமாகத் தயாரிக்கஇந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

* இது போல் குவைத், இங்கிலாந்து, மேற்கு ஆப்பிரிக்கா, ஓமன் ஆகிய நாடுகளுடன் வரத்தக உறவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684674

**********************


(Release ID: 1684850) Visitor Counter : 166