ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே வாரியத் தலைவர் திரு.வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’
Posted On:
30 DEC 2020 6:26PM by PIB Chennai
ரயில்வே வாரியத் தலைவர் திரு.வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் நவீனமயமாக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (ஐஇடி) வழங்கியுள்ளது.
பாரத ரத்னா சர். எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் பொறியாளர்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி தில்லியில் உள்ள ஐஇடி கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு சிறந்த பொறியாளர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த பொறியாளர் விருது ரயில்வே வாரியத் தலைவர் திரு.வி.கே.யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684749
**********************
(Release ID: 1684828)
Visitor Counter : 236