எரிசக்தி அமைச்சகம்
ஆண்டு நிறைவு கண்ணோட்டம் 2020 - மின்துறை
Posted On:
30 DEC 2020 1:03PM by PIB Chennai
மின்துறை அமைச்சகம் 2020ம் ஆண்டில் மேற்கொண்ட பணிகளின் முக்கிய அம்சங்கள்:
* 83 புதிய துணை மின் நிலையங்கள் தொடக்கம், 224 துணை மின் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. பொது முடக்கத்துக்கு இடையிலும், 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 27,261 டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டன.
* ரூ.45,083 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன. பணப்புழக்கத்துக்காக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தபடி ரூ.1,18,508 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
* இமாச்சலப் பிரதேசத்தில் 210 மெகாவாட் நீர் மின்சார திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ரூ.1810.56 கோடி அனுமதித்தது.
* தீன்தயாள் உபாத்யாய் கிராம ஜோதி திட்டம்: இத்திட்டம் ரூ.75,893 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ரூ.44,416 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டமைப்புக்காக ரூ,14,270 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*. ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம் (IPDS) ( 13.11.2020 வரை): இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு ரூ.32,612 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. நகரப்புறங்களில் மின் விநியோகம் மேம்படுத்தப்பட்டது.
* பசுமை எரிசக்திக்காக 45 மெகா வாட் சூரிய மின் சக்தி தகடுகள் அரசு கட்டிடங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பொருத்தப்பட்டது.
* 1.15 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டன.
* பிரதமரின் சௌபாக்யா திட்டம்: இத்திட்டம் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சாரம் வழங்கும் இலக்குடன் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சட்டீஸ்கர் தவிர அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதாக சௌபாக்யா இணையதளத்தில் அனைத்து மாநிலங்களும் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் தெரிவித்தபடி 280.89 லட்சம் வீடுகளக்கு 11.10.2019 முதல் 30.11.2020 வரை சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை அமல்படுத்த 30.11.2020 வரை ரூ.6,220.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* உஜாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 36.66 கோடிக்கு மேற்பட்ட எல்இடி பல்புகள், 72.05 லட்சம் எல்இடி ட்யூப் லைட்டுகள், குறைவான மின்சக்தியில் இயங்கும் 23.38 லட்சம் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஆண்டுக்கு 48.13 பில்லியன் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
* தெரு விளக்கு தேசிய திட்டம்(SLNP): நாடு முழுவதும் 1.10 கோடிக்கு மேற்பட்ட எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் நகராட்சிகளில் மின்கட்டணச் செலவில் ரூ.5,212 கோடி அளவுக்கு சேமிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684579
------
(Release ID: 1684710)
Visitor Counter : 236