மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜலந்தரில் உள்ள என்ஐடி-யில் கல்விக் கட்டிடம், மாணவர் நல மையம் உள்ளிட்டவற்றை மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்
Posted On:
29 DEC 2020 6:23PM by PIB Chennai
ஜலந்தரில் உள்ள டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) கல்விக் கட்டிடம் மற்றும் மாணவர் நல (செயல்பாட்டு) மையம் ஆகியவற்றை மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். டாக்டர். பி. ஆர்.அம்பேத்கர் தேசியத் தொழில்நுட்ப நிறுவன ஆட்சிமன்றக் குழுவின் தலைவர் திரு.சுபாஷ் சந்தர் ரல்ஹான், அதன் இயக்குநர் பேராசிரியர் லலிதா அஸ்வதி மற்றும் இதர உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு பொறியாளருக்கும் பங்கு உள்ளது என்று நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் கூறினார்.
பொறியாளர்களின் புதுமையான பரிசோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றுவதாக அவர் கூறினார்.
உற்பத்தித் துறையில் பொறியாளர்கள் ஆற்றிவரும் பங்கு இந்தியாவை தற்சார்புடையதாக ஆக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்வதாக மத்திய கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684425
----
(Release ID: 1684505)
Visitor Counter : 157