தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் 2020 - தபால் துறை


கோவிட் நெருக்கடி காலத்தில், தபால் அலுவலங்கள் மூலம் 31 கோடி பணப் பரிவர்த்தனை

Posted On: 29 DEC 2020 5:07PM by PIB Chennai

கோவிட் நெருக்கடி காலத்தில், தபால் அலுவலங்கள் மூலம் 31 கோடி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தபால் துறையில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பணிகள்:

* கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை பீமா கிராமத் திட்டத்தின் கீழ் 17,092 கிராமங்கள் கொண்டு வரப்பட்டன.

* 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், 99 இலட்சம் ஆதார் பதிவு/ புதுப்பிப்பு மனுக்கள்  தபால் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

* கோவிட்-19 காலத்தில் மருந்துகளை விநியோகிக்க இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல நிறுவனங்களுடன் இந்தியத் தபால் துறை இணைந்து செயல்பட்டது.

* கோவிட் 19 நேரத்தில் சிறந்த தபால் சேவை ஆற்றியதற்காக இந்தியா டுடேயின் ஹெல்த்கிரி விருதை இந்தியத் தபால்துறை வென்றது.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஊதியம் வழங்கும் பணியையும், முதியோர் ஓய்வூதியங்களை வழங்கும் பணியையும் மத்திய அரசின் முகவராக தபால்துறை பணியாற்றுகிறது.

* தபால் துறையின் பார்சல் அனுப்பும் திறன் ஆண்டுக்கு 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.

* தினந்தோறும் 75 டன் பார்சல்களை தபால்துறை கையாள்கிறது.

* விரைவுத் தபால் சேவையின் சராசரி விநியோக நேரம் 81 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* தபால்காரர் கைபேசிச் செயலி 1.47 இலட்சம் தபால் அலுவலங்களில் அமல்படுத்தப்பட்டது.

* குறு,சிறு,நடுத்தரத்தொழில்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாவட்டத் தலைமைங்களில் 800 தபால் அலுவலகங்களில் தபால் அலுவலக நிர்யத் மையம் அமைக்கப்படுகிறது.

* சர்வதேசக் கண்காணிப்பு தபால் சேவை மங்கோலியா, பூட்டான் மற்றும் இலங்கைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவை தற்போது 15 நாடுகளில் உள்ளது.

* நாடு முழுவதும் 1.56 இலட்சம் தபால் அலுவலகங்கள் மூலம், 50 கோடிக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை சேவையாற்றுகிறது.

* தபால்துறை சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் ரூ.10,81,293 கோடி இருப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684401

-----



(Release ID: 1684481) Visitor Counter : 307


Read this release in: English , Hindi , Manipuri , Punjabi