உள்துறை அமைச்சகம்

காவல் அமைப்புகளைப் பற்றிய விரிவான தகவல்களை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது

Posted On: 29 DEC 2020 4:31PM by PIB Chennai

2020 ஜனவரி 1 வரையிலான காவல் அமைப்புகளைப் பற்றிய தரவுகளை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் இணையத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

1986-ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவல் அமைப்புகளைப் பற்றிய தரவுகளை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டு வருகிறது.

2019 ஜனவரி 1 வரையிலான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா 2020 ஜனவரி 29 அன்று வெளியிட்டார். ஒரு வருடத்திற்கான காவல் அமைப்புகளைப் பற்றிய தரவுகள் அந்த வருடமே வெளியிடப்படுவது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தரவுகளைச் சரிபர்ப்பதற்காக கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை 26,23,225 ஆகும்.

தற்போது பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை 20,91,488 ஆகும். காலியிடங்களின் எண்ணிக்கை 5,31,737.

மொத்தம் உள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கை 2,15,504 ஆகும். இது ஒட்டுமொத்தக் காவலர்களின் எண்ணிக்கையில் 10.30 சதவீதமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684384

-----



(Release ID: 1684457) Visitor Counter : 257