நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஆண்டு நிறைவு அறிக்கை 2020 (உணவு மற்றும் பொது விநியோகத்துறை) நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம்

Posted On: 29 DEC 2020 12:49PM by PIB Chennai

2020ம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள்:

உணவு பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி முன்னோட்டத் திட்டம் 15 மாநிலங்களில் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது படிப்படியாக நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோக அமைப்பை நடைமுறைப்படுத்தல்: அனைத்து மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013, நாட்டின் 80.60 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உணவு தானியங்கள்/கோதுமை/அரிசி ஆகியவை கிலோ ரூ.1/2/3-க்கு வழங்கப்பட்டனமுதலில் 3 ஆண்டுகளுக்கு இந்த விலையையே தொடர முடிவு செய்யப்பட்டது. பின், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை  இதே விலை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது விநியோக திட்டத்தில் சீர்திருத்தங்களில் ஏற்பட்ட முக்கிய அம்சங்கள்:

 

 * அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 100 சதவீத டிஜிட்டல் ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டன.  23.5 கோடி ரேசன் அட்டைகளில் உள்ள 80 கோடி பயனாளிகளின் விவரங்கள் மாநில அரசுகளின் இணையதளங்களில் வெளிப்படையாக உள்ளன.

* 90 சதவீதத்துக்கும் அதிகமான ரேசன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 * 91 சதவீதத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் (4.91 லட்சம்) எலக்ட்ரானிக் விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பயனாளிகளுக்கு மானிய விலை உணவு தானியங்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

* கோவிட் -19 நெருக்கடி நேரத்தில் உணவு பாதுகாப்பு நடவடிக்கை:

            கோவிட்-19 நெருக்கடி காலத்தில், பொது விநியோகத்துறை 680 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தது. இவற்றில் 350 லட்சம் மெட்ரிக் டன் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 321 லட்சம் மெட்ரிக் டன் , பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. 8 லட்சம் மெட்ரிக் டன் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

* ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை:

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டத்தை பொது விநியோகத்துறை நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் பயனாளிகள் நாட்டின் எந்த பகுதியிலும் ரேசன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

* விவசாயிகளுக்கு ஆதரவு

காரிப் சந்தை பருவத்தில் 2019-20, வரலாற்று சாதனையாக  519.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் 2020-21ல் 389.93 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

* உணவு மானியம்:

1.1.2020 முதல் 15.12.2020 வரை உணவு தானியங்கள் கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கு, உணவு மானியமாக மொத்தம் ரூ. 50,421.172 கோடி  வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.77,980 கோடி இந்திய உணவு கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684317

*****************



(Release ID: 1684373) Visitor Counter : 154