பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்களில் தமிழக மலையாளிப் பழங்குடியினரின் மலைத்தேன் சேர்ப்பு

Posted On: 28 DEC 2020 2:54PM by PIB Chennai

மலைத்தேன் உட்பட 35க்கும் மேற்பட்ட புதிய, பழங்குடியினச் சேகரிப்பு பொருள்கள் இந்தியப் பழங்குடியினக் கடைகளிலும், இணையதளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியப் பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்களை விற்பதற்காக ‘‘எங்கள் வீட்டிலிருந்து உங்கள் வீட்டுக்கு’’ என்ற எட்டாவது பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரம் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பால் (டிரைபட்) எட்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்கள், பலருக்கும் கிடைக்கும்

இந்த வாரம் சேர்க்கப்பட்ட இயற்கைப் பொருள்களில் முக்கியமானது, தமிழக மலையாளிப் பழங்குடியினர் சேகரிக்கும் மலைத்தேன், சாமை வகைகள், புளி, மிளகு  ஆகியவை ஆகும். இந்த மலையாளிப் பழங்குடியினர், வட தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ளனர். இங்கு 3,58,000 பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் மலைப் பகுதிகளில் விவசாயம் செய்கின்றனர்.

கடந்த சில வாரங்களில், அறிமுகம் செய்யப்பட்டப் பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்கள், 125 இந்தியப் பழங்குடியினர் விற்பனையகங்களிலும், மற்றும் -சந்தைத் தளமான tribesindia.com என்ற இணையதளத்திலும், கிடைக்கிறது.

உள்ளூர்ப் பொருள்களையே வாங்கவும், பழங்குடியினர் பொருள்களை வாங்கவும்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684099

-----



(Release ID: 1684159) Visitor Counter : 205