குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பொதுவாழ்வில் குறைந்து வரும் தூய்மையைப் பற்றி குடியரசுத் துணைத் தலைவர் கவலை

Posted On: 26 DEC 2020 7:10PM by PIB Chennai

இந்தியா பவுண்டேஷனால் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு உரை நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று பேசினார்.

பொதுவாழ்வில் குறைந்து வரும் தூய்மையைப் பற்றி கவலை தெரிவித்த அவர், அமைப்பை சுத்தம் செய்வதற்கும் தூய்மையான அரசியலை ஊக்குவிப்பதற்கும் உடனடியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று கூறினார்.

தங்களது உறுப்பினர்கள் எல்லா நேரமும் நன்னடத்தையோடு விளங்குவதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று திரு. நாயுடு வலியுறுத்தினார். கட்சித்தாவல் சட்டத்தை இன்னும் கடுமையானதாகவும், வலிமை மிக்கதாகவும் ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

கவர்ச்சிகரமான திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு நீண்டகால மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

 

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய்க்குப் புகழாரம் சூட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நன்னடத்தை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக திரு. வாஜ்பாய் விளங்கியதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683856

----



(Release ID: 1683905) Visitor Counter : 223