ரெயில்வே அமைச்சகம்

உள்கட்டமைப்பு, புதுமைகள், திறன் விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் வரலாறு காணாத வளர்ச்சியை ரயில்வே இந்த வருடத்தில் எட்டியுள்ளது

Posted On: 26 DEC 2020 3:59PM by PIB Chennai

இந்திய ரயில்வேயைப் பொருத்தவரை உறுதியும், வெற்றிகளும் நிறைந்த ஆண்டாக 2020 அமைந்திருக்கிறது.

உள்கட்டமைப்பு, புதுமைகள், திறன் விரிவாக்கம், சரக்கு சேவைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றில் வரலாறு காணாத வளர்ச்சியை இந்த வருடம் ரயில்வே எட்டியுள்ளது.

கொரோனா சவாலை ஒரு வாய்ப்பாகப் பார்த்த ரயில்வே, வருங்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும், அடுத்த கட்ட பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவதற்கான பணிகளைச் செய்யவும் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது.

திட்டமிடுதல், நிர்வாக அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் அடுத்த 30 வருடங்களுக்கான மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அடித்தளத்தை இந்தக் காலகட்டத்தில் ரயில்வே அமைத்தது.

கோவிட் சவாலை திறம்பட எதிர்கொண்டு ரயில்வே, 6.3 மில்லியன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றது. அதோடு, நாடு முழுவதும் உணவு தானியங்களைக் கொண்டு சேர்த்தது.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பதில் ரயில்வே சரக்குப் போக்குவரத்துச் சேவைகள் பெரும் பங்கு வகித்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683803

-----



(Release ID: 1683898) Visitor Counter : 245