நிதி அமைச்சகம்

கவுகாத்தியில் வருமான வரி சோதனை, கணக்கில் வராத ரூ.100 கோடி பணம் கண்டுபிடிப்பு

Posted On: 26 DEC 2020 2:52PM by PIB Chennai

வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த மூன்று முன்னணி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய வழக்குகளில் தேடுதல் மற்றும் கணக்கிடுதல் நடவடிக்கையை 2020 டிசம்பர் 22 அன்று வருமான வரித்துறை தொடங்கியது.

இந்த மூன்று குழுமங்களும் கடந்த பல வருடங்களாக தங்களது நிகர இலாபத்தை குறைத்துக் காட்டி, கணக்கில் காட்டப்படாத அந்த வருவாயை கௌகாத்தியிலும், கொல்கத்தாவிலும் உள்ள நபர்களின் மூலம் தொழிலுக்குள் மீண்டும் கொண்டு வந்ததாகத் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேடுதலின் போது, போலி நிறுவனங்களின் மூலம் கடன் பெற்றதும் பணத்தை வெவ்வேறு வழிகளின் மூலம் கொண்டு சென்றதும் கண்டறியப்பட்டது.

இதுவரை, ரூ.9.79 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூபாய் இரண்டு கோடிக்கும் மேல் மதிப்புடைய நகைகளுக்கான ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருவாய் தேடுதல் மற்றும் கணக்கிடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று கண்டறியப்பட்டு, அது இன்னும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683788

----



(Release ID: 1683819) Visitor Counter : 194