அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

விஞ்ஞானிகள், நடிகைகள் தொழில் முனைவோர் உள்ளிட்டோர் தங்களது வெற்றியின் ரகசியத்தை இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பகிர்ந்து கொண்டனர்

Posted On: 25 DEC 2020 3:16PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் ஒரு பகுதியாக, பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விஞ்ஞானிகள், நடிகைகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற திருமிகு கல்பனா சரோஜ், உறுதி, பொறுமை, கடின உழைப்பு, திறமை மற்றும் நம்பிக்கை ஆகியவை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகள் என்று கூறினார்.

நடிகை திருமதி ரோகிணி ஹத்தங்காடி, எந்தத் துறையில் பெண்கள் பணிபரிந்தாலும் தங்கள் மனம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும், கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் ஒரு பகுதியாக வேளாண் விஞ்ஞானிகள் கூட்டமும் நடைபெற்றது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி இதை துவக்கி வைத்தார்.

இதில் பேசியவர்கள், தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு நிதி உதவியும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைப் படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683583

                                                         -----


(Release ID: 1683656) Visitor Counter : 181