அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுகம்யா பாரத் திட்டத்தின் உத்திகளை அமல்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும்: அறிவியல் திருவிழா மாநாட்டில் நிபுணர்கள் கருத்து

Posted On: 25 DEC 2020 3:10PM by PIB Chennai

சுகம்யா பாரத் திட்டத்தின் உத்திகளை அமல்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும்: அறிவியல் திருவிழா மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, உதவி தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  பற்றிய மாநாடு நடந்ததுஇந்த் நிகழ்ச்சியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு.தவார் சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.

இதில் அறிவியல், தொழில்நுட்பம் மூலமாக மாற்றத்திறனாளிகளை மேம்படுத்துதல், மற்றும் தற்சார்புக்கான புதுமைகள்குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தீர்வுகள் மட்டும் அல்லாமல், ஆராய்ச்சிகள் மற்றும் உதவி உபகரணங்கள் உருவாக்குதல்  ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் உதவித் தொழில்நுட்பச் சூழலில் பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறையினர் மருத்துவத் துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு புதுமையான அணுகுமுறை தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பரிந்துரைகள், சுகம்யா பாரத் திட்டத்தின் உத்திகள் அமல்படுத்துதல் மட்டும் அல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை அதிகம் உருவாக்க உதவும் எனவும் அவர்கள் கூறினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683581

                                                                   ------



(Release ID: 1683643) Visitor Counter : 251