அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முழு அளவில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 24 DEC 2020 4:49PM by PIB Chennai

தங்களது மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் ஆறாவது பதிப்பில், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

"சமுதாயத்தின் சவால்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் நாம் அனைவரும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக கொரோனா பெருந்தொற்று அமைந்தது. அனைத்து சிக்கல்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் ஒரு பகுதியாக நடைபெறும் பல்லுயிராக்க மாநாடு, பல்லுயிராக்கம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக நிபுணர்களை ஒன்றிணைத்தது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி திரு.ஆதர்ஷ் குமார் கோயல், பல்லுயிராக்க மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 25 வரை மெய்நிகர் தளத்தில் நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழா இதுவாகும்

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைப் படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683329

------



(Release ID: 1683451) Visitor Counter : 123