குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டு மக்களுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2020 2:24PM by PIB Chennai

கிறிஸ்துமஸ் பண்டிகை, நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நமது நாட்டு  மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டவர்  இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதுதான், கிறிஸ்துமஸ்மனிதகுலம் ஞானம் பெற, ஆண்டவர்  இயேசு கிறிஸ்து கற்பித்த இரக்கம்  மற்றும் மன்னிப்பின்  மீதான நமது நம்பிக்கையை இந்தப் பண்டிகை  மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றிணைந்து  பிரம்மாண்டமாகக் கொண்டாடும்  ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும். ஆனால், இந்த ஆண்டு, தற்போதுள்ள கோவிட் தொற்று காரணமாக, நாம்  இந்தப் பண்டிகையை எளிமையாகக் கொண்டாட வேண்டும்.

உலக மக்களின்  சுகாதாரம் மற்றும் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்இந்தப் பண்டிகை, நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.’’

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1683368) வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam