சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானில் 18 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு திரு நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 23 DEC 2020 6:15PM by PIB Chennai

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, ராஜஸ்தானில் 18 நெடுஞ்சாலை திட்டங்களை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி நாளை துவக்கி வைக்கிறார்.

ராஜஸ்தான் முதல்வர் திரு அசோக் கெலாட் இந்த விழாவிற்கு தலைமை ஏற்கிறார். மத்திய அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் மற்றும் மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

நாளை அடிக்கல் நாட்டப்படவிருக்கிற திட்டங்களின் மூலம் 1127 கிலோமீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூபாய் 8,341 கோடி ஆகும். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு இந்த சாலைகள் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683050

                                                                           ----  


(Release ID: 1683149)