மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளத்துறையின் ஆண்டு இறுதி அறிக்கை 2020 - பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் மீனவர்களுக்கு வரமாக உள்ளது

Posted On: 23 DEC 2020 3:31PM by PIB Chennai

மீன்வளத்துறை நல்ல வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஇது மீன்பிடி சார்ந்த துணைத் தொழில்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. குறைந்த விலையில் சத்தான உணவை வழங்கும் துறையாகவும், அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதரமாகவும் உள்ளது. நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் மீன்வளத்துறை முக்கிய இடத்தை வகிக்கிறது. நாட்டில் 28 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வருவாயையும், வேலைவாய்ப்பையும் அளிக்கிறது

2019-20ஆம் ஆண்டில் மீன்வளத்துறை ரூ. 46,662.85 ஏற்றுமதி வருவாய் ஈட்டியுள்ளது.

மீன்வளத்துறையின் 2020-21ஆம் ஆண்டின் சாதனை விவரங்கள்:

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் ( 7.12.20 வரை)

உள்நாட்டு மீன்வளம்

உள்நாட்டு மீன்வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 4,171 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளங்களில் மீன் வளர்ப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் 3,763 கூண்டுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

109 ஈரால் பண்ணைகளுக்கு ஒப்புதல்

கடல் மீன்வளம் 

* 122 ஆழ்கடல் மீன்படிப் படகுகள்.

*  217 மீன்பிடிப் படகுகள் மேம்பாடு

* மோட்டர் மீன்பிடிப் படகுகளில் 2,755 பயோ - கழிவறைகள் கட்டப்பட்டன.

* கடல் மீன் வளர்ப்புக்கு 656 கூண்டுகள்.

மீனவர் நலன்

மீனவர்களுக்கு 1820 மாற்றுப் படகுகள்

மீன்பிடித் தடைக்காலத்தில் 1,22,551 மீனவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

மீன்வளக் கட்டமைப்பு 

70 குளிர்பதனக் கிடங்குகளுக்கு அனுமதி

127 மீன் தீவன ஆலைகள்.

6,288  மீன் போக்குவரத்து மையங்கள்.

606  மீன் சில்லரை விலை விற்பனைச் சந்தைகள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682945

-----



(Release ID: 1683040) Visitor Counter : 141