பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் டிரைப்ஸ் இந்தியா விற்பனையகத்தை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 22 DEC 2020 7:12PM by PIB Chennai

கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்தொலாய்  சர்வதேச விமான நிலையத்தில் டிரைப்ஸ் இந்தியா விற்பனையகத்தை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைஃபெட்) தலைவர் திரு ரமேஷ் சந்த் மீனா, துணை தலைவர் திருமதி பிரதிபா பிரம்மா, டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா உள்ளிட்டோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அர்ஜுன் முண்டா, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் லட்சியம் என்றார். இது பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதே ஆகும் என்று அமைச்சர் கூறினார்.

பழங்குடியினரின் வாழ்வை மாற்றியமைக்கவும், அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.

பழங்குடியினர் தயாரிக்கும் பல்வேறு பொருட்கள் 125-க்கும் அதிகமான டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682748

-----


(रिलीज़ आईडी: 1682824) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi