அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் சவால்களை சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளாக எப்போதும் எடுத்துக்கொள்கிறார்கள்: சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர். சேகர் மாண்டே

Posted On: 20 DEC 2020 7:06PM by PIB Chennai

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், சவால்களை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்கிறார்கள் என  சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர். சேகர் மாண்டே  கூறியுள்ளார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா குறித்து  அகில இந்திய வானொலிக்கு, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநர் டாக்டர்.சேகர் மாண்டே  உட்பட பலர்  தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

டாக்டர். சேகர் சி. மாண்டே கூறுகையில், ‘‘ பிரதமர் விடுத்த அழைப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் மையக் கரு, ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலக நலனுக்கான அறிவியல்’’ என்ற தலைப்பில் உள்ளது. இது தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்தும். இதர கருத்துக்களுடன், புதிய கருத்துக்களும் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளன. சில நிகழ்ச்சிகளில், சமூக அறிவியலும், இயற்கை அறிவியலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிவியல் கல்வி, விளையாட்டுகள், பொம்மைகள் ஆகியவையும் இந்திய சர்வதேசத் திருவிழாவில் இணைக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாடு பல சவால்களை சந்தித்துள்ளது. ஆனால் நமது விஞ்ஞானிகள் எப்போதும் இந்த சவால்களை சமூகத்துக்கு சேவை செய்யும் வாய்ப்புகளாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த அறிவியல் திருவிழாவுக்கு பதிவு செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,000- தாண்டிவிட்டது’’ என்றார்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர்.மாதவன் நாயர் ராஜீவன் கூறுகயைில், ‘‘நமது நாட்டை தற்சார்பு அடையச் செய்வதிலும், உலக நன்மைக்கான பங்கை நிறைவேற்றுவதிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கியமான பங்கு வகிக்கிறது’’ என்றார்.

இதே போல் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையைச் சேர்ந்த பலர் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பற்றி தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682241

-----



(Release ID: 1682277) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Punjabi