ரெயில்வே அமைச்சகம்
பயணிகள் காத்திருப்போர் பட்டியல் குறித்து ரயில்வே விளக்கம்
Posted On:
19 DEC 2020 11:41AM by PIB Chennai
தேசிய ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகளை வெளியிட்டன.
2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும், அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை, தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறுவது குறைக்கப்படும். ரயிலில் உள்ள மொத்த இருக்கைகளை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது. இருப்பை விட தேவை அதிகமாகும் சமயங்களில் காத்திருப்போர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681926
**********************
(Release ID: 1682002)
Visitor Counter : 276