சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19-க்கான அமைச்சர்கள் குழுவின் 22-வது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்

Posted On: 19 DEC 2020 1:20PM by PIB Chennai

கோவிட்-19-க்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 22-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹார்தீப் எஸ். புரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே மற்றும் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 12 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து  தொய்வில்லாமல் போராடி வரும் கோவிட் வீரர்களுக்கு தமது மனமார்ந்த நன்றியை கூட்டத்தின் தொடக்கத்திலேயே டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் வளர்ச்சி இரண்டு சதவீதத்துக்கு குறைந்துள்ளதாகவும், 1.45 சதவீதமாக உள்ள உயிரிழப்புகளின் விகிதம் உலகத்திலேயே மிகவும் குறைவானவற்றில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

நமது இலக்கான 30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681944

**********************


(Release ID: 1681981)