சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஊட்டச்சத்துக்காக ரூ.886 கோடிக்கும் அதிகமான நிதி, வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
18 DEC 2020 8:00PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், 75-வது தேசிய காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் மாநாட்டில் காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
“காசநோய் இல்லாத இந்தியா”-வை உருவாக்குவதற்காக தொடர்புடைய அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று தன்னுடைய உரையில் கூறிய அமைச்சர், இந்த இலட்சியத்தை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.
நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஊட்டச்சத்துக்காக ரூ.886 கோடிக்கும் அதிகமான நிதி, வங்கிக்கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
1939-ஆம் ஆண்டில் இந்தியக் காசநோய் சங்கம் நிறுவப்பட்டதில் இருந்து கடந்த எட்டு தசாப்தங்களாக தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் அச்சங்கத்தின் உறுப்பினர்களை அமைச்சர் பாராட்டினார்.
“கோவிட் பெருந்தொற்றின் போது காசநோயை எதிர்த்துப் போரிட்ட காசநோய் வீரர்களின் உறுதி நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681807
**********************
(Release ID: 1681842)
Visitor Counter : 182