சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம்: திரு கட்கரி

Posted On: 18 DEC 2020 7:23PM by PIB Chennai

மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹுனார் ஹாட்’ - ஐ மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பான்வாடியாவில் உள்ள நுமானிஷ் மைதானத்தில் 2020 டிசம்பர் 18 முதல் 27 வரை நடைபெறும் ஹுனார் ஹாட்’, கைவினைக் கலைஞர்களின் பொருள்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும்..

ஹுனார் ஹாட்’ - ஐ தொடங்கி வைத்து பேசிய திரு நிதின் கட்கரி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும், வறுமையை ஒழிப்பது மோடி அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.

நமது நாட்டின் கிராமங்களில் உள்ள திறன் மிக்க கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பான தளத்தை ஹுனார் ஹாட் வழங்குகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள் சர்வதேச சந்தைகளை சென்றடையும் போது, நமது கலைஞர்கள் வளம் பெறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு வினய்குமார் சக்சேனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681799

**********************



(Release ID: 1681830) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Hindi , Telugu