பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா - இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்தின் 35-வது பதிப்பு

Posted On: 17 DEC 2020 7:30PM by PIB Chennai

இந்தியா மற்றும் இந்தோனேசியக் கடற்படைகளுக்கிடையேயான இந்தியா - இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்தின் 35-வது பதிப்பு 2020 டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான குலிஷ் மற்றும் பி 81 ரோந்து விமானம் ஆகியவை இந்தோனேசியக் கடற்படைக் கப்பலான கே ஆர் ஐ கட் நியாக் டியென் மற்றும் ரோந்து விமானத்துடன் இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடும்.

இந்தியாவின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) இலட்சியத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன் இணைந்து ரோந்து உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, இந்தியா மற்றும் இந்தோனேசியா பல்வேறு துறைகளில் நெருங்கிய நட்பு மற்றும் உரையாடல்களைப் பல வருடங்களாகக் கண்டு வருகிறது. இவை கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681520

**********************


(Release ID: 1681563) Visitor Counter : 309