ரெயில்வே அமைச்சகம்

சிலஹட்டி - ஹல்திபாரி ரயில் இணைப்பை இந்திய, வங்கதேசப் பிரதமர்கள் தொடங்கி வைத்தனர்

प्रविष्टि तिथि: 17 DEC 2020 6:41PM by PIB Chennai

இந்தியா, வங்கதேச நாடுகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சிலஹட்டி - ஹல்திபாரி ரயில் இணைப்பை இந்திய, வங்கதேசப் பிரதமர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு வங்கதேசப் பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து இந்தியாவில் உள்ள ஹல்திபாரி  மற்றும் வங்கதேசத்தில் உள்ள சிலஹட்டி நகரங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பை காணொலி உச்சி மாநாட்டின் போது திறந்து வைத்தனர்.

இதன் மூலம் இரு நாடுகளையும் சேர்ந்த மக்களுக்கு இடையேயான உறவு வலுப்படும். பிரதமர்கள் ரயில் இணைப்பைத் தொடங்கி வைத்ததற்குப் பின்னர், சிலஹட்டி ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் ஒன்றை வங்கதேச ரயில்வே அமைச்சர் திரு. முகமது நூருல் இஸ்லாம் சுஜன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

சர்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த இந்த ரயில், இந்திய மற்றும் வங்கதேச மக்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681502

**********************


(रिलीज़ आईडी: 1681545) आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi