நிதி அமைச்சகம்

பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு உதவ, தேசிய வளர்ச்சி வங்கியுடன் 1000 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

प्रविष्टि तिथि: 16 DEC 2020 5:30PM by PIB Chennai

கொவிட்-19 பாதிப்பிலிருந்து இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்கு உதவ, தேசிய வளர்ச்சி வங்கியுடன் 1000 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,364 கோடி)   கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

கொவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம்  காரணமாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்தது. முறைசாரா துறையில் வேலையிழப்பு ஏற்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு உதவ இந்த கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இது ஊரக பகுதிகளில், கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதார பாதிப்பை குறைக்க அரசுக்கு உதவும்.

பொருளாதார நடவடிக்கைக்கு உதவும் இயற்கை வள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இது ஊரக பகுதிகளில் வேலைவாய்பை உருவாக்கும்.

குறிப்பாக நகரப் பகுதிகளில் இருந்து, சொந்த கிராமங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை  இணை செயலாளர் திரு பால்தியோபுருஷர்தா மற்றும் தேசிய வளர்ச்சி வங்கி சார்பில் அதன் துணைத் தலைவர் திரு ஜியான் ஜூ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த கடனை 30 ஆண்டு காலத்துக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681118

**********************


(रिलीज़ आईडी: 1681246) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu