தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சென்னையை சேர்ந்த தபால் ஊழியர்களுக்கு மேக்தூத் விருது
प्रविष्टि तिथि:
15 DEC 2020 6:04PM by PIB Chennai
தபால் ஊழியர்கள் 2019-20,-ஆம் ஆண்டில் செய்த சிறப்பான சேவைகளுக்காக மேக்தூத் விருதுகளை அவர்களுக்கு இன்று வழங்கி தபால் துறை கௌரவித்தது.
சென்னை மண்டலத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் திரு எம் டி சீனிவாசன் மேக்தூத் விருதுகளை இன்று பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.
சென்னையில் உள்ள தபால் தொழில்நுட்பத்துக்கான திறன்மிகு மையத்தின் துணை இயக்குநரான திரு வி எம் சக்திவேலும் இந்த விருதை பெற்றார்.
மத்திய தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680824
(रिलीज़ आईडी: 1680914)
आगंतुक पटल : 227