கலாசாரத்துறை அமைச்சகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்த கூட்டத்தை திரு பிரகலாத் சிங் பட்டேல் நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2020 6:02PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை இறுதி செய்வது குறித்த கூட்டத்தை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று நடத்தினார்.

விரிவான ஆலோசனை கூட்டமாக புது தில்லியில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் நேதாஜியின் குடும்பத்தினர், இந்திய தேசிய ராணுவ அறக்கட்டளையின் உறுப்பினர்கள், கல்வியாளர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் 2021 ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கும் என்றும், தலை சிறந்த விடுதலைப் போராட்ட வீரருக்கு உரிய அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை ஒரு வருடம் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680823

 


(வெளியீட்டு அடையாள எண்: 1680913) வருகையாளர் எண்ணிக்கை : 137
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri