பாதுகாப்பு அமைச்சகம்
நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக ராணுவத் தளவாடங்களில் பழுதை சீர்செய்வது தொடர்பான இணைய கருத்தரங்கு
Posted On:
15 DEC 2020 4:40PM by PIB Chennai
நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக ராணுவத் தளவாடங்களில் பழுதை சீர்செய்வது தொடர்பாக இந்திய ராணுவமும் இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கமும் இணைந்து 2020 டிசம்பர் 14 அன்று ஓர் இணைய கருத்தரங்கை நடத்தியது.
உலகளவில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ராணுவத் தளவாடங்களில் பழுதை சீர்செய்யவும், இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி உதவியாக இருக்கும்.
துவக்க நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே உபாத்யா, வடக்கு எல்லைப் பகுதிகளில் தற்போது உள்ள சூழ்நிலையில் நமது தளவாடங்களின் கருவிகளை பாதுகாப்பு தொழில்துறையின் உதவியுடன் சீர் செய்து வருவதாகக் கூறினார்.
இந்த கருத்தரங்கில் 140 தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680786
(Release ID: 1680908)
Visitor Counter : 129