பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா இயக்கம் இந்தியப் பொருளாதார வரலாற்றின் திருப்புமுனை தருணம்: திரு ராஜ்நாத் சிங்
Posted On:
14 DEC 2020 7:10PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்று நாட்டில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறதென்றும், மனித உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அது ஏற்படுத்திய பாதிப்புகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய அவர், தற்சார்பு இந்தியா இயக்கம் இந்தியப் பொருளாதார வரலாற்றின் திருப்புமுனை தருணம் என்று கூறினார்.
பெருந்தொற்றின் போது உயிர்களைப் பாதுகாக்க தலையாய முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்றும், உயிரிழப்புகளைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவ சமுதாயம் எடுத்ததென்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது முடக்கத்திற்குப் பின்னர், இந்தியப் பொருளாதாரம் சீரடைய ஒரிரு வருடங்களுக்கும் அதிகமாக ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், நாடு துரிதமாக மீண்டெழுந்ததாக அமைச்சர் கூறினார்.
இவ்வாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், இது வரை இல்லாத வகையில் 35.73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நேரடி வெளிநாட்டு முதலீட்டை இந்தியா பெற்றுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680603
------
(Release ID: 1680636)
Visitor Counter : 107