அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரேசிலைச் சேர்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு, இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு

Posted On: 11 DEC 2020 5:22PM by PIB Chennai

இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு பிரேசிலைச் சேர்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் ராமானுஜன் பரிசு பெறுவது இதுவே முதல் முறை.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள  ஐஎம்பிஏ கணித மையத்தைச் சேர்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு, இந்தாண்டுக்கான ராமானுஜன் பரிசு, காணொலிக் காட்சி மூலம் டிசம்பர்  9ம் தேதி வழங்கப்பட்டது. இயற்கணித வடிவியலில் சிறப்பான பணியாற்றிதற்காக  கரோலினா அரோஜோவுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவாகஇளம் கணித மேதைக்கான பரிசை, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையானது, கோட்பாடு இயற்பியலுக்கான சர்வதேச மையம், சர்வதேச கணிதச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.  வளரும் நாடுகளைச் சேர்ந்த, 45 வயதுக்கு குறைவான கணித ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தப் பரிசு  ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680017

***************


(Release ID: 1680047) Visitor Counter : 201
Read this release in: Urdu , English , Hindi , Punjabi