தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

பிரதமரின் தொடக்கவுரையோடு ஆரம்பித்த இந்திய மொபைல் மாநாட்டின் முதல் நாளில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றன

Posted On: 08 DEC 2020 7:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்கவுரையோடு ஆரம்பித்த இந்திய மொபைல் மாநாடு 2020-இன் முதல் நாளான இன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் தகவல் தொடர்பு வலைப்பின்னல் கண்டு வரும் மாற்றங்கள் குறித்து ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.

தொழில்துறை தலைவர்கள் அதிகளவில் இந்த மாநாட்டில் பங்கேற்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை குறித்து பேசினர். தொழிற்சாலை 4.0 - திறன்மிகு பணியிடங்கள் மற்றும் தொழிலகங்கள், தானியங்கி முறைஎன்னும் தலைப்பில் முதல் அமர்வு நடைபெற்றது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் கூட்டம் - நாளைய வலைப்பின்னல்கள் - 5ஜி-க்காக வலைப்பின்னல்களை மாற்றியமைத்தல்’, ‘தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் - அனைவரையும் உள்ளடக்கிய புதுமைகள் - டிஜிட்டல் பாகுபாட்டை சரிசெய்தல்’, ‘தொலைதொடர்பு மேகம் - வலைப்பின்னல் மாற்றத்தின் முன்னோடிமற்றும் 5ஜி-க்கு அப்பால்: அடுத்த தலைமுறைக்கான தரநிலைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியாவுக்கிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதுஆகியவை மற்ற நான்கு அமர்வுகளின் தலைப்புகளாகும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவர் மற்றும் மத்திய தொலைதொடர்பு துறையின் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷின் வரவேற்புரையுடன் தொடங்கிய இன்றைய தினத்தின் நிகழ்வுகளில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு முகேஷ் அம்பானி, பாரதி நிறுவனத்தின் தலைவர் திரு சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்களின் உரைகள் இடம்பெற்றன.

மத்திய கல்வி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே மற்றும் மத்திய தொலைதொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் & நீதி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679172

**********************



(Release ID: 1679201) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Manipuri