அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா : முன்னோட்ட நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 08 DEC 2020 6:02PM by PIB Chennai

‘‘கொவிட்-19 தொற்று காரணமாக மெய்நிகர் முறையில், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ நடத்துவது, அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத் துறையினரிடையே, அறிவியல் மனநிலை வளர்க்கும், கொண்டாடும் உணர்வைக் குறிக்கிறது’’ என இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அறிவியல் ஆய்வு மையங்களில் பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  லடாக்கில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ)  உயரமான மலைப்பகுதி ஆய்வு மையப் பிரிவும், இந்த முன்னோட்ட நிழ்ச்சியை நடத்தியது. இதில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

`டிஜிட்டல் தளம் மூலம், ஒரே கிளிக்கில் நாட்டில் அனைத்து தொலை தூரப் பகுதிகளில் உள்ள மக்களையும், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவால் (ஐஐஎஸ்எப்) ஒன்றிணைக்க முடியும். இது  ஐஐஎஸ்எப் நடத்துவதன் நோக்கம் நிறைவேற உதவும். இந்த விழாவை மிக வெற்றிகரமாக நடத்தவுள்ள அறிவியல் துறையினருக்கு வாழ்த்துகள்.   இந்த அறிவியல் திருவிழாவில், 10,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ந்து, புதுமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்களாலும், அறிவியல் ஆர்வலர்களாலும்,  ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்  நிகழ்ச்சியாகும். ”  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679133

***********************



(Release ID: 1679162) Visitor Counter : 191